Ferrero S.p.A. & Ors. v. Abhimanyu Prakash & Ors.
Distinctive product shape மற்றும் registered shape mark ஆகியவற்றை commercial copying-க்கு எதிராகப் பாதுகாக்க முடியும். Counterfeit products தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் empty containers-ஐ தயாரித்து வழங்குவதும் சட்டப் பொறுப்பை ஏற்படுத்தக்கூடும்.
வழக்கின் சுருக்கமான விளக்கம் (SHORT DESCRIPTION ABOUT THE CASE):
இந்த வழக்கு NUTELLA-வின் தனித்துவமான glass jar மற்றும் அதற்கு மிகவும் ஒத்த empty jars-ஐ எதிர்மறை தரப்பினர் தயாரித்து விற்பனை செய்தது தொடர்பானது. Product shape மீதான Trademark உரிமைகள், brand பற்றிய வணிக அறிவு மற்றும் CPC-ன் Order XIII-A கீழ் Summary Judgment வழங்குவதற்கான வாய்ப்பு ஆகியவற்றை டெல்லி உயர்நீதிமன்றம் பரிசீலித்தது.
வழக்கின் உண்மைகள் (FACTS):
Ferrero மற்றும் அதனுடன் தொடர்புடைய plaintiffs, NUTELLA products-ஐ வெவ்வேறு அளவுகளில் தனித்துவமான glass jars-ல் விற்பனை செய்து வந்தனர். NUTELLA Marks, labels மற்றும் glass jar-ன் distinctive shape ஆகியவற்றின் மீது Trademark உரிமைகள் இருப்பதாக plaintiffs கோரினர்.
Defendants, “NUTELLA glass jars” என்று விவரிக்கப்பட்ட empty glass jars-ஐ IndiaMART மற்றும் பிற commercial channels மூலம் தயாரித்து விற்பனை செய்து வந்ததை plaintiffs கண்டறிந்தனர்.
Customer வழங்கிய designs அடிப்படையிலேயே jars தயாரிக்கப்பட்டதாகவும், அந்த வடிவம் industry-ல் பொதுவாக Nutella jar என அழைக்கப்படுவதாகவும் defendants வாதிட்டனர். Counterfeit finished products தயாரிப்பதில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்றும் மறுத்தனர்.
Local Commissioner நடவடிக்கைகளின்போது, defendants கட்டுப்பாட்டில் இருந்த premises-லிருந்து சுமார் 3,05,916 empty jars கைப்பற்றப்பட்டன.
நீதிமன்றத்தின் கண்டறிதல்கள் (FINDINGS):
Customer வழங்கிய drawings-லேயே அந்த product “Nutella cocoa jar” என்று குறிப்பிடப்பட்டிருந்ததை Court கண்டறிந்தது. Defendants தங்களுடைய commercial activities-ல் “NUTELLA glass jar” என்ற description-ஐ பயன்படுத்தியிருந்ததும், plaintiffs-ன் brand மற்றும் goodwill பற்றிய அறிவு அவர்களுக்கு இருந்ததைக் காட்டியது.
தாங்கள் முதல் முறையாகவும் அறியாமையிலும் infringement செய்தவர்கள் என்ற defendants-ன் வாதத்தை Court ஏற்கவில்லை. Manufacturing activity-ன் அளவு, jars-ன் தன்மை மற்றும் அந்த shape பொதுவான industry design என்ற வாதத்திற்கு ஆதாரம் இல்லாதது ஆகியவை முக்கியமாகக் கருதப்பட்டன.
Material facts மற்றும் evidence மூலம் infringement claim போதுமான அளவில் நிறுவப்பட்டிருந்தால் Summary Judgment வழங்க முடியுமா என்பதையும் Court பரிசீலித்தது.
பரிந்துரை (SUGGESTION):
Brand owners, distinctive product shapes-ஐ சட்டப்படி சாத்தியமான இடங்களில் Trademark மற்றும் Design registrations மூலம் பாதுகாக்க வேண்டும். Product drawings, packaging records, registration certificates, market evidence மற்றும் copy செய்யப்பட்ட containers-ன் samples ஆகியவற்றைப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்
ஒரு distinctive brand-ன் shape அல்லது name-ஐ பிரதிபலிக்கும் containers அல்லது packaging தயாரிக்க order கிடைக்கும்போது manufacturers மற்றும் suppliers உரிய due diligence மேற்கொள்ள வேண்டும். Infringement தெளிவாகத் தெரியும் சூழ்நிலையில் customer instructions இருப்பது மட்டும் supplier-ன் சட்டப் பொறுப்பைத் தானாக நீக்காது.
தீர்ப்பு / சட்டக் கொள்கை (JUDGMENT / PRINCIPLE):
Court, தேவையான injunctive relief மற்றும் costs உட்பட suit-ஐ decree செய்தது. Counterfeit finished product-ஐ தாங்களே தயாரிக்கவில்லை என்று supplier கூறினாலும், branded containers-ஐ மிகவும் ஒத்த வடிவத்தில் வணிகரீதியாகத் தயாரித்து வழங்குவது சட்டப் பொறுப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதை இவ்வழக்கு எடுத்துக்காட்டுகிறது.



